17 வயது சிறுவனுடன் சேர்த்து வையுங்கள்.. கணவன் வேண்டாம்: பொலிசாரிடம் அடம் பிடித்த பெண்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த பெண் பற்றி பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை கீழ்ப்பாக்கம் லாக்நகரைச் சேர்ந்தவர் சுவேதா(23), இவர் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்ததால், இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

அதன் பின் பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில், இருவரும் எங்கிருக்கின்றனர் என்பதை கண்டுபிடித்து, சுவேதாவை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் ஒருவர் கூறுகையில், சுவாதிக்கு ஏற்கானவே இரண்டு திருமணங்கள் ஆகியுள்ளன.

அதில் முதல் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், முருகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

முருகன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சுவேதா சென்னை குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவேதாவின் உறவினர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் அவரை பார்ப்பதற்கு சுவதே அடிக்கடி அங்கு சென்று வந்துள்ளார். அப்போது சுவேதாவின் உறவினரின் பெட்டிற்கு அருகில் பிரசாத் என்பவரின் உறவினர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அடுத்தடுத்த பெட் என்பதால் சுவேதாவுடன் பிரசாத்தின் 17 வயது மகன் பேசியுள்ளார். அதன் பின் இருவரும் தங்களுடைய போன் எண்களை மாற்றிக் கொண்டு பேசி வந்துள்ளனர்.

மருத்துவமனையிலிருந்து சென்ற பிறகும் இவர்களின் நட்பு தொடர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் தான் திருமணமானதையே மறந்த சுவேதா அவரிடம் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளார்.

இந்த நிலையில் தான் கடந்த 27-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்ற பிரசாத்தின் மகன் மாயமாகியுள்ளார். அப்போது அவர் குறித்து தேடிய போது தான் சுவேதா பிரசாத்தின் மகளை காதலிப்பது தெரியவந்தது.

அவருக்கு 17 வயது என்பதால் அவர் மீது நாங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பிரசாத்தின் மனைவி, சுவேதா மீது புகார் கொடுத்தார்.

அதன்பேரில் நாங்கள் சுவேதாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளார்.

மேலும் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட சுவேதாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முதல் கணவனிடம் ஒரு குழந்தையும், சில தினங்களுக்கு முன்பு இரண்டாவது கணவன் முருகனிடம் இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்துள்ளார்.

அப்போது அவர் உங்களுடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறிய பின் தான், பிரசாத்திடம் மாயமாகியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுவேதாவிடம் பொலிசார் பேசிய போது, அவர் பிரசாத்தின் மகனுடன் தன்னை வாழ அனுமதியுங்கள் என்று அடம்பிடித்துள்ளார்.

பெற்ற குழந்தைகள் மீதுகூட அவருக்கு பாசம் இல்லை. மூன்று குழந்தைகளை பெற்ற அவர், 17 வயது சிறுவனுடன் வாழ விரும்புகிறார், இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்