சபரிமலையில் பதற்றம்! பொலிசார் மீது கல்வீச்சு- வன்முறை வெடித்தது

Report Print Kavitha in இந்தியா

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிராக கேரளாவில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் போராடி வரும் நிலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது, இதனால் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென கலவரம் ஏற்பட்டுள்ளது, கொல்லம் பகுதியில் பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் வன்முறையில் முடிந்ததாகவும், பொலிசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதற்கிடையே போராட்டக்காரர்கள் முதல்வர் பினராயின் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டு இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers