தேசத்திலேயே இதுதான் முதல்முறை! போக்குவரத்து பொலிசாக களமிறங்கும் ரோபோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் போக்குவரத்து பொலிசாக ரோபோ வலம் வர உள்ளது.

சென்னையின் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை சரியாக மதிப்பதில்லை என்றும், போக்குவரத்து பொலிசார் அனைத்து சிக்னல்களிலும் இருந்து போக்குவரத்தை சீர்செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

இது நடைபயண வாசிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது.

அதாவது, போக்குவரத்து பொலிசாருக்கு பதிலாக ரோபோ விரைவில் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவிலேயே முதல் முறையாக போக்குவரத்து பொலிசாக ரோபோ செயல்பட உள்ளது.

இந்த ரோபோ மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது, வாகனங்களை சீர்படுத்தும் பணி ஆகியவற்றில் ஈடுபட உள்ளது.

இந்த ரோபோ குழந்தைகளை கவரும் விதமாகவும், அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை புரியும் விதமாக எடுத்துக் கூறும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers