தமிழ் சிறுமியால் அவமானப்படுத்தப்பட்ட ராகுல்: பொய்யாக பரவிய தகவல்... வெளியான உண்மை

Report Print Deepthi Deepthi in இந்தியா

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின் ராகுல் காந்தி, முதல் முறையாக துபாய்-க்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றார்

துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் 50 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றும்போது 14 வயது தமிழ் சிறுமியால் கேள்விகளால் அவமானப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

மேலும், அச்சிறுமி கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தியால் பதில் அளிக்க முடியாமல் சிரித்துக்கொண்டு சமாளித்ததாக செய்திகள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

ஆனால், அவை போலியான தகவல் என தெரியவந்துள்ளது.

தமிழ் சிறுமி கேட்ட கேள்வியும், ராகுலின் பதிலும்

அனைவருக்கும் வணக்கம் என்று ஆரம்பித்த சிறுமி, ராகுலிடம் முதலில் கேட்ட கேள்வி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது… இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாக கூறும் நீங்கள் ஏன் குஜராத் தேர்தலின் போது பட்டை அணிந்து கோவிலுக்கு சென்று வந்தீர்கள் அதுவே காஷ்மீரில் நடந்தால் குல்லா அணிந்து கொள்கிறீர்கள் ஏன் என்று கேட்க ஒரு நிமிடம் ராகுல் அமைதியானர்.

ராகுல் காந்தியின் பதில் : அனைத்து மதத்தினரும் சமம் என்பதை நிரூபிக்கும் பொருட்டே நான் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வருவதாகவும் ,விரைவில் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவதே எனது நோக்கம் என்று தெரிவித்தார்.

சிறுமியின் மற்றொரு கேள்வி -இந்தியாவில் கடந்த கால ஆட்சியில் 80 % ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சி பொறுப்பில் இருந்திருக்கிறது ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையையும் வளர்ச்சியையுமா நீங்கள் இனிமேல் செய்ய போகிறீர்களா என்றுகேட்க, ராகுல் என்னசெய்வதென்று தெரியாமல் ஆடிப் போனார்.

பதில் எதுவும் கூறாமல் சிரித்தபடியே நின்றிருந்தார். இதனைப்பார்த்த காங்கிரஸ் ஐடி பிரிவினர் நேரலையை நிறுத்தினர்.

மேலும் சிறுமி கூறியதாவது, இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் இனிமேலாவது தாங்களும் தங்கள் நண்பர்களும் மதவாதம் என்று சொல்லாமல் ஊழல் இல்லாத ஆட்சியை இனிமேலாவது தருவோம் என்று வாக்கு கேளுங்கள் என்று கூறியிருந்தார்.

உண்மை என்ன?

ஆனால், மேலே கூறப்பட்ட உரையாடல்கள் நடந்ததாக வெளியான தகவல் பொய்யானது என்று Alt News என்ற இணையதளம் உண்மை கண்டறிந்து இது பொய்யான தகவல் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

அதாவது, ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் உள்ள St Joseph’s என்ற பள்ளியை சேர்ந்த SIDDHI BAGWE என்ற சிறுமி SAVE GIRL CHILD என்ற தலைப்பில் மிக அருமையாக பேசியுள்ளார்.

அவரின் அருமையான கருத்துக்கள் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த வீடியோவில் இடம்பெற்ற சிறுமிதான் ராகுல் காந்தியிடம் கேள்விகளை கேட்டவர் என்று தவறாக பரப்பப்பட்டது.

அதுமட்டுமின்றி, மைதானத்தில் பொது உரை மற்றும் மாணவர்களுடன் உரையாடியதை தவிர, ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் யாரிடமும் உரையாடவில்லை என தெரியவந்துள்ளது.

இக்காரணத்தால், ராகுல் காந்தி தொடர்பாக வெளியான தகவல் போலியானது என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்