பிரசவத்தில் பிறந்த குழந்தையை ஆசையாக கொஞ்சிய தந்தை: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பிரசவத்தில் இளம்பெண் குழந்தை பெற்ற நிலையில் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை சிறிது நேரம் கூட கொண்டாட முடியாத நிலைக்கு பெண்ணின் குடும்பத்தார் தள்ளப்பட்டனர்.

வேலூரை சேர்ந்த குசேலன் என்பவரது மனைவி பாரதிக்கு கடந்த, 12ம் திகதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்ததாக கூறி செவிலியர் ஒருவர் குழந்தையை கொண்டு வந்து குசேலன் மற்றும் குடும்பத்தாரிடம் காட்டினார், இதையடுத்து குசேலன் தனது குழந்தையை கொஞ்சினார்.

ஆனால் அன்று இரவு பாரதிக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்றும் பெண் குழந்தை தான் பிறந்ததாக மற்றொரு செவிலியர் தெரிவித்தார்.

மேலும், பெண் குழந்தை எடை குறைவாகவும் மூச்சுத் திணறலுடன் பிறந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கடந்த 15ம் திகதி இறந்தது.

இது தொடர்பாக குசேலன் மருத்துவமனை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் பொலிசார் பாரதி பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட நாள், மருத்துவ சிகிச்சை, குழந்தை பிறந்த நேரம் உள்பட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

இதில், பாரதிக்கு பிறந்தது பெண் குழந்தைதான் என, உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து குசேலன் தம்பதியரிடம் பொலிசார் விளக்கமாக கூறினர். இதை குசேலன் தம்பதியர் ஏற்றுக் கொண்டதையடுத்து இறந்த பெண் குழந்தையின் சடலம், அவர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

இதனால் குழந்தை பிறந்ததாக மகிழ்ச்சியில் ஆழ்ந்த குசேலன் மற்றும் குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்