இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் தோழியின் செயல்: பொலிசாரிடம் சிக்கிய கடிதம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் அவரது தோழியும் மரணமடைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் நகரில் உள்ள கல்லூரி விடுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இங்குள்ள புனித ஜோசஃப் கல்லூரி விடுதியில் கடந்த ஞாயிறு அன்று திரக்‌ஷாயனி என்ற 17 வயது மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இத்தகவல் அறிந்த சில நிமிடங்களில் அவரது நெருங்கிய தோழியும் அந்த விடுதியின் காவலருமான 24 வயது புஷ்பவதியும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் கர்னூல் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார்,

திரக்‌ஷாயனியின் அறையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். திரக்‌ஷாயனியின் தற்கொலை தொடர்பில் தகவல் அறிந்த அவரது பெற்றோர்,

தங்கள் மகள் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், கடந்த நான்கு நாட்களாக தங்களிடம் இது தொடர்பில் பேசி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

திரக்‌ஷாயனியின் திடீர் பிரிவை தாங்க முடியாமல் புஷ்பவதியும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவரும் நெருங்கிய நண்பர்கள் எனவும், ஆனால் புஷ்வதியின் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளனவா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.

இந்த இரு தற்கொலை விவகாரம் தொடர்பில் கல்லூரி நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers