சொன்னபடி நடந்தால் தேர்வு செய்யப்படலாம்! டென்னிஸ் பயிற்சியாளரால் தாய், சிறுமிக்கு நடந்த கொடூரம்

Report Print Vijay Amburore in இந்தியா

மும்பையில் உடை மாற்றும் அறையில் இளம் டென்னிஸ் வீராங்கனையிடம், அத்துமீறிய பயிற்சியாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, மும்பையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய தாயுடன் வருகை தந்திருந்தார்.

போட்டிகளுக்கு இடையே கூப்பர் ஹாலில் உடை மாற்றுவதற்காக சிறுமி சென்றிருக்கிறார். அப்போது அங்கு சென்ற 35 வயதான பிரதீப் சங்வான் என்கிற பயிற்சியாளர், தொடக்கூடாது இடத்தில் கைவைத்துள்ளார்.

அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததால், நான் சொன்னபடி நடந்தால் நீ போட்டியில் தேர்வு செய்யப்படலாம் என கூறி பிரதீப் அத்துமீறியுள்ளார். இதனையடுத்து அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறிய சிறுமி, நடந்தவை பற்றி தன்னுடைய தாயிடம் கூறியிருக்கிறார்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த தாய், வேகமாக பயிற்சியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். உடனே அவருடைய கையையும் மடக்கி பிடித்து பயிற்சியாளர் அத்துமீறியிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார், பயிற்சியாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்