தாக்குதலில் இறந்த மற்றொரு தமிழக வீரர் இவர் தான்: கதறும் கர்ப்பிணி மனைவி..துடித்துபோன மாற்றுதிறனாளி தங்கை

Report Print Raju Raju in இந்தியா

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த இன்னொரு தமிழக வீரர் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்பது தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நேற்று மாலை ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த வீரர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி நேற்றைய தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

மற்றொரு வீரரை அடையாளம் கண்டறியும் பணி நீண்ட நேரமாக நடந்த நிலையில், அவர் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்பது தெரியவந்துள்ளது.

சிவச்சந்திரனுக்கு மனைவி மற்றும் 2 வயதில் மகன் உள்ளனர்.

அவர் மனைவி தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவர் இறந்த செய்தி கேட்டு கதறி அழுதார்.

அதே போல சிவச்சந்திரனின் மாற்றுத்திறனாளி தங்கையும் அண்ணனின் மறைவை தாங்க முடியாமல் கதறி துடித்தது காண்போர் கண்களை குளமாக்கியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்