நான் போரில் இறந்தால்...நெஞ்சை உருக்கும் ஒரு இராணுவ வீரரின் கவிதை

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஒவ்வொரு இராணுவ வீரனும் போரில் வீரமரணம் அடைவதில் பெருமை கொள்கிறான்.

அப்படி தனது மரணத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிற ஒரு இராணுவ வீரரின் கவிதை நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது.

நான் போரில் இறந்தால்
என்னை பெட்டியிலிட்டு
வீட்டிற்கு அனுப்புங்கள்....
என்னுடைய பதக்கங்களை
என் நெஞ்சில் ஏற்றுங்கள்..
என் தாயிடம் கூறுங்கள் ,
நான் சிறப்பாக
பணியாற்றினேன் என்று...
என்னுடைய தந்தையிடம்
சொல்லுங்கள்
மண்டியிட வேண்டாம் என்று
என் தம்பியை நன்றாக படிக்க
சொல்லுங்கள்
இனி, என்னுடைய பைக்கின்
சாவி அவனுக்கே சொந்தம்
எனது சகோதரியிடம்
சொல்லுங்கள்...
வேதனை அடைய
வேண்டாம் என்று,
அவனது சகோதரன் சூரிய
அஸ்தமனத்திற்கு பிறகு
நீண்ட, மீளா துயில் கொள்ள
போகிறான்....
எனது தேசத்திடம்
சொல்லுங்கள்,
அழவேண்டாம் என்று...
ஏனெனில் நான்
இறப்பதற்காகவே பிறந்த
இராணுவ வீரன்

-இப்படிக்கு

எல்லையில் இருக்கும்

இராணுவ வீரன்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்