இறந்த தமிழக வீரர்களுக்கு 1 லட்சம் நிதியுதவி: பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜம்மு காஷ்மீரின் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இதற்கிடையே உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோர் உடல்கள் நேற்று தமிழகம் வந்தன. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் அறிவித்துள்ளது. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக பாதுகாப்புப்படை வீரர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்