குடும்பத்துடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது நடந்த துயர சம்பவம்!

Report Print Vijay Amburore in இந்தியா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 தம்பதியினர் பலியாகியதோடு, 24 பேர் காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அங்குச்சாமி (50), தன்னுடைய மனைவி லட்சுமி(48) மற்றும் குடும்பத்தாருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் காரைக்குடியில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றுவிட்டு, குடும்பத்துடன் மீண்டும் சென்னைக்கு வேனில் திரும்பியுள்ளார்.

வேன் இன்று அதிகாலை 3.45 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்றுகொண்டிருந்த போது, கண் இமைக்கும் நேரத்தில் எதிரே வந்த பேருந்து மீது மோதி பயங்கரமான விபத்தில் சிக்கியுள்ளது.

இதில், வேனில் வந்த அங்குசாமி, லட்சுமி, உமாபதி, விஜயலட்சுமி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

மேலும், வேன் மற்றும் பேருந்தில் பயணித்த 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்