நள்ளிரவில் தங்கையை வைத்து லிப்ட் கேட்டு அந்த சம்பவத்தை செய்தோம்! பொலிசாரை அதிர வைத்த சகோதரரின் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நெடுஞ்சாலையில் லிப்ட் கேட்பது போல் கேட்டு அவர்களை கொலை செய்து பணம், நகைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் சோனிப்பட் சாலையோரத்தில் சில நாட்களுக்கு முன்பு அரசு போக்குவரத்து டிரைவரின் சடலம் தனியாக கண்டுபிடிக்கப்பட்டது.

அதே போன்று ஆட்டோரிக்‌ஷா டிரைவர் ஒருவரும் அரசு டிரைவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு இறந்திருந்தார்.

இதையடுத்து பொலிசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், இறந்த ஆட்டோ டிரைவரின் ஆட்டோ அலிப்புர் அடுத்த பக்தாவர்புர் கிராமத்தில் இருப்பதை கண்டுபித்தனர்.

அதன் பின் பொலிசார் பக்தாவர்புர் கிராமத்தில் இருக்கும் சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் மேற்கொண்ட விசாரணையில், வேலை இல்லாமல் இருக்கும் ஷிவகுமார் மற்றும் நீலம் எனும் அண்ணன், தங்கை இருவரும் அடிக்கடி இரவில் தாமதமாக வீடு திரும்புவது பற்றி தெரியவந்துள்ளது.

இதனால் பொலிசாருக்கு அந்த இரண்டு பேரின் மீது சந்தேம் ஏற்பட, அவர்களை கடந்த செவ்வாய்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் நாங்கள் தான் இந்த கொலையை செய்தோம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

இரவு நேரத்தில் ஆண்கள் நாங்கள் லிப்ட் கேட்டால், நிறுத்தமாட்டார்கள் என்பதால், அதுவே ஒரு பெண் கவர்ச்சியாக இருந்தால் உடனே வாகனத்தை நிறுத்துவார்கள் என்பதால் தங்கையை இந்த திட்டத்திற்கு பயன்படுத்தினோம் என்று ஷிவக்குமார் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

மேலும் லிப்ட் கொடுக்கும் டிரைவரிடம் தங்கை நீலம் ஆசை வார்த்தை கூறி பேசிக் கொண்டு வருவார்.

அதன் பின் யாரும் இல்லாமல் இருக்கும் இடத்தில் காரை நிறுத்த வைப்பார். அப்போது துப்பட்டாவை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்வோம்.

அதே போன்று தான் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவரை கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

அதுபோல, காரை ஓட்டிக்கொண்டு வந்த அரசு பஸ் டிரைவரான பிரித்தம் சவுகான், 2 பேரையும் ஸ்வரூப் நகரில் இறக்கி விடுவதாக லிப்ட் கொடுத்தார். மதுபன் சவுக் அருகே அவரை மின்சார ஒயரால் கழுத்தி நெறித்து காரை ஒட்டிச் சென்றோம்.

டயர் பஞ்ச்சர் ஆனதால், அங்கேயா சாலையோரமாக சடலத்தை வீசிவிட்டு பின்னர் டயர் மாற்றிக்கொண்டு கிராமத்துக்கு அந்து சேர்ந்தோம் என அண்ணன், தங்கை ஆகிய இருவரும் தெரிவித்து உள்ளனர்.

பிரித்தமின் காரும் கொலையாளிகளின் வீடருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்த பொலிசார், கார் மற்றும் ஆட்டோரிக்‌ஷாக்களை பறிமுதல் செய்துள்ளனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers