கையில் சிக்கிய இந்திய விமானியை கண்மூடித்தனமாக அடிக்கும் பாகிஸ்தானியர்கள்! வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா

பாகிஸ்தான் விமானப்படையுடன் நடந்த மோதலில் மாயமான விமானி சென்னையில் பயிர்சி பெற்றவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார், விமானப்படை துணை மார்ஷல் கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது, பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அவர்கள் உறுதி செய்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ரவிஷ் குமார், பாகிஸ்தானின் எப்-16 விமானப்படை விமானம் ஒன்று எல்லையில் அத்துமீறிய போது, இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த தாக்குதலின் போது மிக் 21 விமானத்தை நாம் இழந்துவிட்டோம். ஆனால், நம்முடைய விமானியின் நிலை குறித்து தெரியவில்லை.

தங்கள் பிடியில் அந்த விமானி இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. அந்த தகவலை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பாகிஸ்தான் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு மக்கள் மீது நாம் தாக்குதல் நடத்தவில்லை. பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தி இருந்தோம் என்று கூறினார்.

இந்நிலையில் காணமல் போனதாக கூறப்பட்ட இந்திய விமானி பாகிஸ்தான் வசம் இருப்பதாகவும், அவர் சென்னையைச் சேர்ந்தவர் எனவும், பெயர் அபினாந்தன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதில் பேசும் அவர் தன் பெயர் போன்ற தகவல்களை கூறுகிறார். மேலும் கையில் சிக்கிய அவரை பாகிஸ்தானியார்கள் கண்மூடித்தனமாக அடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்