மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்! போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா

Report Print Fathima Fathima in இந்தியா

சர்வதேச எல்லை அருகே பறந்த பாகிஸ்தானின் போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது.

ராஜஸ்தானின் பிகானரில் நேற்று காலை 11.30 மணியளவில் தரையில் இருந்த ரேடார் சாதனம் விமான ஊடுருவதை கண்டறிந்தது.

இதனை தொடர்ந்து சுகாய்-30 ரக ஜெட் ஒன்று வான்வெளியில் கண்காணிப்புச் செய்து கொண்டிருந்த போது ஊடுருவல் பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விமானம் சர்வதேச எல்லையின் இன்னொரு புறத்தில் போய் விழுந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 நாட்களில் 2வது முறையாக இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானத்தை அனுப்ப முயன்று பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்