நாடகங்களில் பெண் வேடம் போட்ட இளைஞரை உயிருக்கு உயிராக காதலித்த ஆண்: அதன்பின்னர் நடந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் தன்னை விட 20 வயது குறைவான இளைஞருடன் நபர் ஒருவர் ஓட்டம் பிடித்த நிலையில் இது அந்த நபரின் மனைவியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்த 45 வயது நபர் டீக்கடை நடத்தி வந்தார்.

இதோடு நாடகங்களிலும் நடித்து வந்தார். அப்போது உடன் நடிக்கும் 25 வயது இளைஞருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.

அந்த இளைஞர் பெரும்பாலும் நாடகங்களில் பெண் வேடம் போடுவதோடு, பெண்ணை போன்று தான் உடை அணிவார்.

இதையடுத்து அவர் மீது 45 வயதான நபருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

இருவரும் ஆண்கள் என்பதையும் மீறி ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கிய நிலையில் தற்போது ஓட்டம் பிடித்துள்ளனர்.

இது 45 வயது நபரின் மனைவியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவர் கூறுகையில், என் கணவர் அந்த இளைஞருடன் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தார், அப்போதே சந்தேகம் ஏற்பட்டது.

இப்போது அவர் இப்படியான மோசமான செயலை செய்துள்ளார், எங்களுக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இது தொடர்பாக பொலிசில் புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.

பொலிசார் கூறுகையில், டீக்கடை நடத்தி வந்த நபரும் இளைஞரும் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.

ஓரின திருமணம் சட்டப்படி குற்றம் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் திருமணம் செய்யாமல் இருவரும் ஒன்றாக வாழ்ந்தால் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இப்படி ஒரு விசித்தரமான புகார் முதல் முறையாக எங்களிடம் வந்துள்ளது, இது தொடர்பாக சட்ட ஆலோசனை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்