157 பேருடன் பலியான விபத்தில் இந்தியர்களின் அடையாளம் தெரிந்தது!

Report Print Deepthi Deepthi in இந்தியா

எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்துபோன 157 பேரில் 2 இந்தியர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிழந்துள்ள நிலையில், தற்போதைக்கு 2 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

வைத்யா பனகேஷ் பாஸ்கர், வைத்யா ஹன்சின் அனகேஷ், நுகவரப்பு மனிஷா மற்றும் ஷிகா கார்க் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

ஷிகா கார்க், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக ஆலோசகர். நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தார்.

நுகவராப்பு மனிஷா, ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers