பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தஷ்வந்த் வழக்கை போன்றே அதிகபட்ச தண்டணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.

பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், ஆபாசமாக படம் எடுத்தும் அவா்களை மிரட்டி வந்த கும்பல் அண்மையில் பிடிபட்டது.

இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், ரிஷ்வந்த் ஆகிய நான்கு போ் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் பல முக்கியப் புள்ளிகள், அரசியல் தலைவா்களின் தலையீடு உள்ளதாக புகார் எழுந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இளம்பெண்ணொருவர் அளித்த புகாரின் பேரில் பாலா என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

இதனிடையில் பொள்ளாச்சி வழக்கில் சிக்கிய குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என சமூகவலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார், தஷ்வந்த் வழக்கை போன்றே பொள்ளாச்சி வழக்கிலும் அதிகபட்ச தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்