பெண்களை ஆபாசமாக படமெடுத்த திருநாவுக்கரசு! உதவி செய்த அந்த பெண் தோழி யார்?

Report Print Fathima Fathima in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு சேலத்தை சேர்ந்த பெண் தோழி ஒருவர் உதவியது தற்போது தெரியவந்துள்ளது.

திருநாவுக்கரசு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படிக்கும் போது அதே கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர் சேலத்தை சேர்ந்தவராவார், இருவரும் நட்பாக பழகிய நிலையில் அந்த பெண் மூலமே ஏராளமான பெண்களின் செல்போன் எண்கள் திருநாவுக்கரசுக்கு கிடைத்துள்ளது.

மேலும் பொலிசார் தேடிய போது திருநாவுக்கரசை தலைமறைவாக தங்க வைத்ததும் அந்த பெண் தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி பொலிசார் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே திருநாவுக்கரசின் வீட்டில் பொலிசார் சோதனை நடத்தியுள்ள நிலையில், அந்த பெண்ணின் மூலம் ஏராளமான தகவல்கள் தெரியவரலாம்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குறித்த பெண்ணை பிடிக்க பொலிசார் சேலம் விரைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்