இரவோடு இரவாக அறிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்

Report Print Abisha in இந்தியா

தமிழகத்தில்போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் ஒரு தொகுதியில் மட்டும் அறிவிக்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பல நாட்களாக தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில்நேற்று இரவு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் தமிழகத்தில் உள்ள 9தொகுதிகளிலும்அறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவகங்கை தொகுதியில் தொடர்ந்து யார் போட்டியிடுவது என்ற இழுபறி நீடிப்பதால் அறிவிக்கப்படவில்லை.

மற்ற தொகுதிகளில் குறிப்பாக இதில்

  1. திருவள்ளூர் – ஜெயக்குமார்
  2. சிவகங்கை - அறிவிக்கப்படவில்லை.
  3. விருதுநகர் - மாணிக் தாகூர்
  4. தேனி - ஈவிகேஎஸ் இளங்கோவன்
  5. திருச்சி – திருநாவுக்கரசர்
  6. கரூர் - ஜோதிமணி
  7. கிருஷ்ணகிரி - டாக்டர் செல்லக்குமார்
  8. ஆரணி-விஷ்ணுபிரசாத்
  9. கன்னியாகுமரி - வசந்தகுமார். எனஅறிவிக்கப்பட்டுள்ளது

இதில் கன்னியாகுமரிதொகுதியில் போட்டியிடும் வசந்தகுமார் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருப்பதால் அவர் எம்.பி தேர்தலில் வெற்றிபெற்றால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers