பெண்களின் கற்பை போன்றது ஓட்டு அதை விற்காதீர்கள் – சீமானின் பிரச்சாரம்

Report Print Abisha in இந்தியா

பெண்களின் கற்பை போன்றது ஓட்டு என்றும், எனவே அதை விற்காதீர்கள் என்று நாம் தமிழர்கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல்நெருங்குவதை அடுத்து அனைத்து கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து இன்று தருமபுரியில் உள்ள அரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அப்போது தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ருக்மணி தேவியையும், அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திலீப் பாப்பிரட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரான சதீஸ் ஆகியோருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்தார்

அப்போது பேசிய அவர், ஒவ்வொரு ஓட்டையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்க வருவார்கள். பணத்துக்கு ஓட்டுப் போடாதீர்கள்.பெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியமோ அதே போல ஓட்டும் கற்பை போல முக்கியமானது. அதனால்,உங்கள் வாக்கை விலைக்கு விற்காதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers