திருமணத்தின் போது மணமேடையில் மணமகன் செய்த செயலால் ஷாக் ஆன உறவினர்கள்... வைரலாகும் வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் திருமணத்தின் போது மணமகன் மணமேடையில் பப்ஜி கேம் விளையாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சமீபகாலமாக டிக்டொக், PUBG போன்ற ஆன்லைன் செயலிகளுக்கு இளைஞர்கள் பெரிதும் அடிமைகளாகி வருகின்றனர். சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் இன்னும் சில குடும்பத்ததலைவர்கள் என பெரும்பாலானோர் எப்போதும் PUBG விளையாடியவண்ணம் இருக்கின்றனர்.

ஆன்லைன் விளையாட்டுக்களின் மீது அவர்களுக்கு இருக்கும் மோகம் அதிகரிப்பதை பார்த்து, PUBG உணவகம், திருமண பத்திரிகைகளில் பப்ஜி லோகோ போன்றவைகளை தொழிலாளர்கள் தங்களது விற்பனையை அதிகரித்துக்கொள்கின்றனர்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் கூட ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் ஒருவர் கணவர் தன்னை பப்ஜி கேம் விளையாடவிடாமல் தொடர்ந்து தடுத்து வருவதாக கூறி விவகாரத்து கோரியிருந்தார். அது பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், திருமணத்தின்போது மணமகன் ஒருவன் PUBG, விளையாடிக்கொண்டிருந்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், மணமகன் PUBG விளையாடிக்கொண்டிருக்கும்போது அவருக்கு பரிசு கொடுப்பதையும் கூட பொருட்படுத்தாமல் PUBG விளையாட்டை தொடர்கிறார். அப்போது அருகில் இருக்கும் மணப் பெண் என்ன சொல்வது என்று தெரியாமல் உறவினர்களை பார்த்து கொண்டிருக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்