தாழ்த்தப்பட்டவரை மலம் உண்ணவைத்த ஆதிக்க சமூகத்தினர்- தமிழகத்தில் கொடூரம்

Report Print Basu in இந்தியா

தமிழகத்தில் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை அடித்து உதைத்து மலம் உண்ணவைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடியில் உள்ள திருவாண்துறை கிராமத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. கொல்லிமலை என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை, ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ், சக்திவேல் மற்றும் ராஜ்குமார் மூவரும் சேர்ந்து அடித்து மலம் உண்ணவைத்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு பகையை தீர்க்க கடந்த 28ம் திகதி மூவரும் சேர்ந்த கொல்லிமலையை கட்டையால் அடித்து மலம் உண்ணவைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட கொல்லிமலை அளித்த பேட்டியில் கூறியதாவது, என்னை அடித்து போட்டு, ராஜேஷ் ஒரு குச்சியில் மலத்தை எடுத்து வந்து எனது வாயில் திணித்தனர். பத்து நாட்களாக நான் சாப்பாடே சாப்பிடவில்லை, சாப்பிட்டால், தூங்கினால் மலம் வாசனை தான் வருகிறது என வேதனையுடன் கூறியுள்ளார்.

கொல்லிமலை அளித்த புகரை அடுத்து மூன்று பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், சக்திவேல் மற்றும் ராஜேஸை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்