மத்திய அமைச்சரவையில் பாஜக தலைவர் அமித்ஷா...? யார் விட்டுக்கொடுப்பது

Report Print Abisha in இந்தியா

இந்தியாவில் பாஜக தலைமையிலான அரசு வெற்றிபெற்றுள்ள நிலையில், புதிய அமைச்சரவையில் பாஜக தலைவர் அமித்ஷா இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், பாஜகவின் புதிய அமைச்சரவை குறித்த திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது.

இதில், பாஜக தலைவர் அமிட்ஷா இடம்பெறுவார் என்று எதிர்பாக்கப்பட்டுகின்றது. மேலம், அவர் இது குறித்து விரும்பம் தெரிவித்துள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவருக்கு உள்துறை அல்லது நிதி துறை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் உள்துறை ஏற்கனவே பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் வகித்து வருகிறார். எனவே அவர் விட்டு கொடுப்பது சந்தேகமே.

மேலம், நிதித்துறையில் வகிக்கும் அருண்ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருக்கிறார். எனவே அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பு வகிப்பது சந்தேகமே என்று தெரிகிறது. எனவே அந்த பதவியை அமிட்ஷா-விற்கு வழங்கலம் என்று கூறப்படுகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers