மகள் திருமண ஏற்பாடு தொடர்பாக நளினி வைத்த உருக்கமான கோரிக்கை.. நீதிமன்றம் கூறுவது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

மகள் திருமணம் தொடர்பாக பரோல் கேட்டு நளினி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தமிழக அரசிடம் பல முக்கிய கேள்விகளை முன்வைத்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் தனது மகள் திருமண ஏற்பாட்டுக்காக பரோல் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் இவ்வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதிடவும் அவர் அனுமதி கோரியிருந்தார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று தமிழக அரசுக்கு எழுப்பியுள்ள கேள்வியில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் அரசுக்கு என்ன பிரச்சனை உள்ளது எனவும், இது தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் நளினி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிட அவருக்கு உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers