விவாகரத்தான கணவர் மூலம் பிள்ளை பெற வேண்டும்... நீதிமன்றத்தை நாடிய யுவதி: கணவர் அளித்த பதில்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் விவாக ரத்து கோரி காத்திருக்கும் கணவரில் இருந்து பிள்ளை பெற வேண்டும் என்ற யுவதியின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

விவாகரத்து கோரி தீர்ப்புக்காக காத்திருக்கும் 35 வயது பெண்மணியே, நீதிமன்றத்தை நாடி, தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

யுவதியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கணவன் மனைவி இருவரையும் இந்த விவகாரம் தொடர்பில் ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தின் இடையே, செயற்கை முறையில் கருவுற செய்யும் மருத்துவர் ஒருவரது ஆலோசனை பெறவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

2017 ஆம் ஆண்டு குறித்த யுவதியில் இருந்து விவாகரத்து கேட்டு, அந்த கணவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இருவரும் வேறு வேறு குடியிருப்புகளில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது ஒரு குழந்தைக்கு பெற்றோரான இந்த தம்பதிகளின் விவாகரத்து நடவடிக்கைகள் முன்னேற்றம் கண்டுவரும் நிலையிலேயே,

குறித்த யுவதி, தமது கணவரில் இருந்து மீண்டும் ஒரு பிள்ளை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அது இருவருடனான உடல் உறவின் மூலமாகவொ அல்லது செயற்கை கருவுறுதல் முறை மூலமாகவோ வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் யுவதியின் கோரிக்கையை முற்றாக நிராகரித்த கணவர், இதில் தமக்கு எந்த உடன்பாடும் இல்லை எனவும், இது சட்டவிரோதம் எனவும் அவர் நீதிமன்றத்தை அறியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து உயிரணு தானம் முறையில் யுவதியின் கோரிக்கையை நிவர்த்தி செய்ய நீதிமன்றம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

மேலும், கணவரின் ஒப்புதல் இல்லாமல் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியாது எனவும், ஆனால் யுவதியின் கோரிக்கையானது ஏற்றுக்கொள்ள கூடியது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால் எந்த முறையிலும் தமக்கு அந்த யுவதியில் இருந்து பிள்ளை வேண்டாம் என கணவர் உறுதியாக உள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்