திமுக-வின் முக்கிய பொறுப்பு இனி உதயநிதிஸ்டாலினுக்கு!

Report Print Abisha in இந்தியா

திமுக-வின் இளைஞர் அணி செயலாளராக நடிகரும் திமுகவின் அடிப்படை உறுப்பினருமான உதயநிதி ஸ்டானின் பெறுப்புவகிக்க உள்ளதாக திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக பலவாய்ந்த கட்சியாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், கட்சியின் தலைவராக ஸ்டாலின் பெறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். அவரது மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரத்தில் அதிகம் தீவிரம் காட்டி வந்தார்.

பிரச்சாரங்கள் அனைத்திலும் உதயநிதி, நான் பொறுப்புகள் ஏற்க வரவில்லை, கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டும் செயல்படுவேன் என்ற தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,தற்போது திமுக-வின் இளைஞர் அணி செயலாளராக இருந்த மு.பே.சாமிநாதன் தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். அதன் அடிப்படையில் அடுத்த செயலாளர் பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...