தமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் இன்னும் சரணடையாத சரவணபவன் ராஜகோபால்...! என்ன காரணம்?

Report Print Abisha in இந்தியா

2001 ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கி பிரின்ஸ்சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால் ஆயுள் தண்டனைக்கு சரணடையும் கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை.

சரவணபவன் ஹொட்டலில் வேலை பார்த்து மேலாளரின் மகள் ஜீவஜோதி மீது ராஜகோபலுக்கு ஈர்ப்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஜீவஜோதி பிரின்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் ஆத்திரம் அடைந்த ராஜகோபால் பிரின்ஸை கொடைக்கானலில் வைத்து கொலை செய்து அங்கேயே புதைத்தார்.

இந்த கொலையை சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உட்பட 8 பேர் சேர்ந்து செய்தததாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது

இந்த வழக்கு விசாரணையில் ராஜகோபால் உள்பட 6 பேருக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் ஜூலை 7ம் திகதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் கெடு விதித்தது. அந்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் அவர் நீதிமன்த்தில் ஆஜராகவில்லை. மேலும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 4ஆம் திகதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், எனவே சரணடைய கால அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...