காதல் மனைவியுடன் தனியாக வசித்து வந்த வியாபாரி... அவர் வீட்டுக்குள் இரவு வந்த காவலாளி கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா
2391Shares

தமிழகத்தில் மனைவி உயிரிழந்த சில மணி நேரத்தில் தன்னுடைய மகனை கொன்று விட்டு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மதுரையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42), பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.

இவர் ஹொட்டல் அதிபரின் மகள் பாரதியை (37) காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாகவும், எனவே இவர்களுடன் இருவீட்டாரும் பேசுவது இல்லை என்றும் கூறப்படுகிறது.

கார்த்திகேயன் தன்னுடைய மனைவியுடன் அடுக்குமாடி வீட்டில் வாடகக்கு வசித்து வந்தார். இவர்களுடைய மகன் சபா (13). இவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

அவனை கார்த்திகேயனும், பாரதியும் கவனமாக வளர்த்து வந்தனர். இதற்கிடையே பாரதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார்.

எனவே மனநிலை பாதிக்கப்பட்ட மகனையும், நோயாளியான மனைவியையும் கவனிக்கும் பொறுப்பு கார்த்திகேயனிடம் வந்தது.

இந்நிலையில் வீட்டு காவலாளி ஆசைத்தம்பி, குடியிருப்பு பாராமரிப்பு கட்டணம் வசூலிக்க நேற்று இரவு கார்த்திகேயன் வீட்டிற்கு சென்ற போது வெகு நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கவில்லை.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது ஆசைத்தம்பிக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. கார்த்திகேயன் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

இது குறித்து அவர் பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, கார்த்திகேயன் பிணமாக தொங்கிய அறையில் பாரதியும், அவருடைய மகன் சபாவும் பிணமாக கிடந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வீட்டில் இருந்து 15 பக்கம் அளவில் கார்த்திகேயன் எழுதிய கடிதம் சிக்கியது.

அதில், தனது மனைவி அதிகாலை 3 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். மனைவி இல்லாத வாழ்க்கையை இனி வாழ பிடிக்கவில்லை. மேலும் எனது மகனும் மாற்றுத்திறனாளி என்பதால் அவனை கவனிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தேன். எனவே மகனும் நானும் சாகப்போகிறோம்.

தனக்கு சொந்தமான பணம் மற்றும் சொத்தை ஏழை எளிய மக்களுக்கு வழங்குமாறு எழுதப்பட்டிருந்தது.

பொலிசாரின் விசாரணையில் மனைவி இறந்த துக்கத்தில் மகனை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை விட்டு கார்த்திகேயேன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்