பெற்றோர் அளித்த ஆடம்பர கார்.. பிடிக்காததால் இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்! வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் பெற்றோர் அளித்த BMW ஆடம்பர கார் பிடிக்காததால், அதனை இளைஞர் ஒருவர் ஆற்றில் தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.

ஹரியானா மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது பெற்றோரிடம் ஜாக்குவார் எனும் ஆடம்பர காரை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால், ஜாக்குவாருக்கு பதிலாக BMW எனும் மற்றொரு ஆடம்பர காரை அவரது பெற்றோர் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

குறித்த இளைஞருக்கு அந்த கார் பிடிக்கவில்லை. இதனால் அந்த ஆடம்பர காரை ஆற்றில் தள்ளிய அவர், அதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், இது விபத்து இல்லை என்றும், தமக்கு கார் பிடிக்காததாலேயே ஆற்றில் தள்ளியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று குறித்த இளைஞரையும், காரையும் மீட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்