பாலியல் குற்றத்தில் தேடப்பட்டு வந்த நபர்! விசாரணையில் சிக்கிய பெண் மர்ம மரணம்?

Report Print Abisha in இந்தியா
119Shares

பாலியல் குற்றத்திற்கு பொலிசார் தேடப்பட்டுவந்த நபருடன் தொடர்புடைய பெண் கால் நிலையத்தில் மர்மமாக மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் மீது வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இவரை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கிறிஸ்டோபர், இஸ்ரவேல் என்பவரின் மனைவி லீலாபாய் என்பவருடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த வள்ளியூர் போலீசார் லீலாபாயை வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்

இந்நிலையில் விடியவிடிய நடத்தப்பட்ட விசாரணயின் போது லீலாபாய் அதிகாலை திடீரென ரத்தவாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை பொலிஸ் நிலையத்தில் இருந்து சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

லீலாபாயின் இறப்பு குறித்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ள நிலையில் இது குறித்து நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அலீமா நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார் பின்னர் லீலாபாய் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்