பெற்ற தாயை கொன்று மூளையை வறுத்து சாப்பிட தயாரான மகன்... கொடூரனின் புகைப்படம் வெளியானது

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை கொலை செய்து அவர் மூளையை சாப்பிட முயன்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராய்கார் அருகே உள்ள கிராமம் போடால்டா. இங்கு சிதாராம் ஓராயான் என்பவர் வசித்து வந்துள்ளார். போதைக்கு அடிமையான இவர் எந்த வேலைக்கும் போகாமல் தினமும் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தன்னுடைய அம்மாவை தொந்தரவு செய்து வருவது வாடிக்கை.

இப்படித்தான் சம்பவத்தன்றும் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். கையில் பணம் இல்லை என்று அம்மா சொன்னதால், ஆத்திரம் அடைந்த சிதாராம் அவரை அடித்து உதைத்துள்ளார்.

பின்னர் மண்டையிலேயே கம்பியை வைத்து அடித்து நொறுக்கி உள்ளார். பிறகு தாயின் மண்டைக்குள் இருந்து மூளையை தனியாக வெளியே எடுத்து, அதனை வறுத்து சமைத்து சாப்பிட முயன்றுள்ளார்.

இதை பார்த்த அவரது அண்ணி அங்கு வந்து பதறிபோய் சத்தம் போடவும், சிதாராம் அங்கிருந்து ஓடிவிட்டதாக தெரிகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் எண்ணெய் சட்டியில் தாயின் மூளையை வறுத்து வைத்திருந்ததை பார்த்து அதிர்ந்து போய்விட்டனர்.

இதையடுத்து தப்பி ஓடிய சிதாராமை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்