ரத்த காயங்களுடன் வீட்டில் சடலமாக கிடந்த பிரபல நடிகர் தீபக் தினகரின் தந்தை... சென்னையில் பரபரப்பு சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நடிகர் தீபக்கின் தந்தை சென்னையில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தக திமி தா, முன் தினம் பார்த்தேனே, இவனுக்கு தண்ணில கண்டம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் தீபக் தினகர்.

இவர் திருமதி செல்வம், தென்றல் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளதோடு தொகுப்பாளராகவும் மக்களிடையே பிரபலமானவராக இருந்து வருகிறார்.

தீபக் சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

அவர் தந்தை விட்டல் திகார் ராவ் மற்றும் தாய் விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் விட்டலின் மனைவி கடந்த 26 -ஆம் திகதி கும்பகோணத்துக்கு சென்றார்.

இதனால் விட்டல் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், விட்டல் மனைவி கும்பகோணத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை ஊர் திரும்பினார்.

அப்போது வீட்டில், விட்டல் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் பொலிசார் வழக்குப் பதிவு செய்து, விட்டல் திகார் ராவ் இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்