அப்பா இறந்துட்டாங்க... பள்ளி மாணவியை அழைத்து செல்ல வந்த நபர்! ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மாணவியின் தந்தை இறந்துவிட்டதாக கூறி, அவரை கடத்திச் செல்ல முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி, அங்கிருக்கும் பள்ளில் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த மாதம் 21-ஆம் திகதி பள்ளிக்கு சென்ற போது திடீரென்று மாயமானதால், பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து பொலிசார் மாணவியின் மொபைல் போனை சோதித்து பார்த்த போது, அதில், கர்நாடகா மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்த ஒரு எண்ணில் இருந்து அதிக அழைப்புகள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அந்த மொபைல் போன் சிக்னலை பின் தொடர்ந்த பொலிசார், குடகு பகுதியில் இருந்து மாணவியை மீட்டனர். அதன் பின் மாணவியை கடத்திச் சென்றதாக ஜெயராம் (24) என்பவரை கைது செய்து விசாரத்தனர்.

விசாரணையில், கண்டுபிடிக்கப்பட்ட மாணவிக்கு ஜெயராம் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். இவரின் சொந்த ஊர் ராஜபாளையம், ஆனால் தற்போது குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் இருக்கும் எஸ்டேட் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார்.

இவர் மாணவியை கடத்திச் சென்று அவருடன் 5 நாட்கள் குடும்பம் நடத்தியுள்ளார். மாணவியை மீட்டு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, ஜெயராமை பொலிசார் சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து கடந்த 21-ஆம் திகதி பெயிலில் வெளிவந்த ஜெயராம், தன்னுடைய உறவினர்கள் இரண்டு பேரை மாணவி படிக்கும் பள்ளிக்கு அழைத்துச் சென்று, மாணவியின் தந்தை இறந்துவிட்டதாகவும், அவரை தன்னுடன் அனுப்பி வைக்கும் படியும், நான் அவருடைய அண்னன் எனவும் கூறியுள்ளார்.

இருப்பினும் சந்தேகமடைந்த ஆசியர்கள், மாணவியுடன் ஆசிரியரையும் அனுப்பி வைக்கிறோம் என்று கூற, கோபத்தின் உச்சிக்கு சென்ற ஜெயராம் கத்தியை காண்பித்து மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் சத்தம் போட்டதால், சக ஊழியர்கள், வருவதற்கு அவர் பள்ளியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers