சென்னை வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல பெண் தொழிலதிபர் ரீட்டா! வெளியான அவரின் புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் லேன்சன் டொயொட்டா கார் ஷோரூம் நிறுவனத்தின் இணை இயக்குநர் ரீட்டா தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டொயொட்டா கார்களை விற்பனை செய்யும் டீலர் நிறுவனமான லேன்சன் டொயோட்டாவின் இணை இயக்குநராக இருந்தவர் ரீட்டா லங்கா.

அவரது கணவரான லங்கா லிங்கா தான் லேன்சன் டொயொட்டாவின் கார் ஷோரூம் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இவர்களின் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் ரீட்டா தனது அறையை விட்டு வெளியே வரவில்லை.

இதையடுத்து வீட்டின் மேற்பார்வையாளர் ஏசுபாதம் காலை 9 மணி அளவில் ஜன்னல் வழியாக பார்த்த போது, ரீட்டா தனது அறையில் தூக்கில் தொங்கியதை பார்த்து பொலிசுக்கு தகவல் சொன்னதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற பொலிசார் ரீட்டாவின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

முதற்கட்ட விசாரணையில், தொழில் ரீதியாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரீட்டா இம்முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.

அதே நேரத்தில் நேற்றிரவு ரீட்டாவுக்கும் அவரது கணவர் லிங்காவுக்கும் இடையே வீட்டிலும் சண்டை ஏற்பட்டதாகவும், இதை அடுத்து லிங்கா வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இரவு முழுவதும் லிங்கா வீடு திரும்பாத நிலையில், தற்கொலை முடிவை ரீட்டா நாடி இருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே இது தொடர்பிலான உண்மை வெளிவரும் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்