தவறான வீடியோ... ஊடகங்கள் செய்த பிழை: மறுநாளே உயிரை விட்ட இன்ஸ்பெக்டர்: மர்மத்தின் உண்மை

Report Print Basu in இந்தியா

பெங்களுருவில் விபத்தில் சிக்கிய பிராந்திய போக்குவரத்து அலுவலக (RTO) இன்ஸ்பெக்டர் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறு என நிரூபனமாகியுள்ளது.

செப்டம்பர் 12ம் தேதி, பெங்களூரில் உள்ள ஆர்டிஓ இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது வாகனத்தை ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானார். விபத்தில் சிக்கிய இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் விபத்து நடந்த நேரத்தில் குடிபோதையில் இருந்தார் என விரைவில் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது

இதை உறுதிப்படுத்தும் வகையில் விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் விரைவில் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனையடுத்து, குடிபோதையில் ஆர்டிஓ இன்ஸ்பெக்டர் வாகனத்தை ஆட்டோரி மீது ஏற்றிச் சென்றதாகவும், ஆட்டோ ஓட்டுநர் உயிருக்கு போராடுவதாக பல முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால், சம்பவம்குறித்து பெங்களுரு நகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் கூறியதாவது, அவர் குடிபோதையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட செய்தி தவறானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மதுவின் போதையில் இல்லை. இதை உறுதி செய்ய போக்குவரத்து பொலிசாரால் உடலில் உள்ள மது அளவை கண்டறியும் alcometer பயன்படுத்தப்பட்டது.

இருப்பினும், அந்த இடத்தில் கூடியிருந்தவர்கள் முறையான சோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். எனவே மருத்துவமனையில் விரிவான மருத்துவ பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்தோம். அவர் குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது வெளிப்பட்டது. இது குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு அல்ல என விளக்கமளித்தனர்.

மஞ்சுநாத்தின் மருத்துவ அறிக்கையில் அவர் குடிபோதையில் இல்லை, ஆனால் மருந்துகள் உட்கொண்டு இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்டிஓ இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் செப்டம்பர் 13ம் திகதி அன்று விபத்துக்கு ஒரு நாள் கழித்து காலமானார். இதை பெங்களுரு போக்குவரத்து பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்