பெற்றோர் பிடிவாதம்... மலை உச்சியிலிருந்து குதித்த காதல் ஜோடி

Report Print Arbin Arbin in இந்தியா

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளம் காதல் ஜோடிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரும் ஆம்பூர் நகரைச் சேர்ந்த நீலாம்பரி என்பவரும், சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரியும் போது காதலித்துள்ளனர்.

இருவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரிய வர, இருவரின் பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த இளம் காதல் ஜோடி, போளூர் சம்பத்கிரி மலையிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பாறையில் சிக்கிய காதல் ஜோடியை சிறுகாயங்களுடன் மீட்ட பொதுமக்கள், தற்கொலை முயற்சியிலிருந்து தடுத்து நிறுத்தினர்.

அத்துடன் நீலாம்பரியை அவர்கள் குண்டுகட்டாக தங்களின் தோள்களில் சுமந்து மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர்.

இதனால், உயிரை மாய்த்து கொள்ளவிருந்த காதல் ஜோடி சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தகவலறிந்த போளூர் பொலிசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்