திருமணமான ஒருநாள் மட்டுமே எனக்கு அவர் கணவராக இருந்தார்... பின்னர்... இளம்பெண் கண்ணீர்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணம் ஆன ஒரே நாளில் மனைவியின் நகைகளை பறித்துகொண்டு அவரை துரத்தியடித்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற இளம்பெண் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், எனக்கும் சிவசங்கர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டது.

ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் கணவராக வாழ்ந்த சிவசங்கர் தொழில் தொடங்க எனது நகையை பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு என்னுடன் சேர்ந்து வாழவில்லை. மேலும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார்.

இதை தட்டிக் கேட்ட எனது தாய் மற்றும் தந்தையை அவதூறாக பேசி தாக்க முற்பட்டார். இது குறித்து பொலிசில் புகார் அளித்தோம்.

ஆனால் சிவசங்கர் தலைமறைவாகி விட்டதாக கூறிய பொலிசார் அதன் பின்னர் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே சிவசங்கர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து நகை மற்றும் பொருட்களை மீட்டுத் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்