35 வருட போராட்டம் ... இந்தியரை திருமணம் செய்த பெண்ணுக்கு ஒரு வழியாக கிடைத்த நிம்மதி!

Report Print Vijay Amburore in இந்தியா

இந்தியரை திருமணம் செய்துகொண்ட பாகிஸ்தான் பெண்ணுக்கு 35 வருடங்களுக்கு பிறகு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஹைதராபாத்தில் 1960 இல் பிறந்த ஜூபேதா பேகம், முசாபர்நகரில் யோகேந்தர்பூரில் வசிக்கும் சையத் முகமது சவேத்தை மணந்து 1985 இல் இந்தியா வந்தார். உடனடியாக அவர் உள்துறை அமைச்சகத்தில் நீண்ட கால விசாவிற்கு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் 10 ஆண்டுகளாக அரசாங்கத்திடம் இருந்தது.

இறுதியில், 1994 இல், ஜூபேதாவுக்கு நீண்ட கால விசா வழங்கப்பட்டது. அப்போதிருந்து, ஜூபேதாவின் விசாவின் காலம் ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 35 வருடங்களுக்கு பின் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜூபேடா கூறுகையில், "நான் லக்னோ மற்றும் புதுதில்லியில் உள்ள பல அரசு அலுவலகங்களுக்கு குடியுரிமைக்காக வந்திருக்கிறேன். எனக்கு ஏன் முன்பு குடியுரிமை கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. இந்திய அதிகாரிகள் பல முறை விசாவை மறுத்தனர்," என்று அவர் கூறினார்.

உள்ளூர் புலனாய்வு பிரிவு (எல்.ஐ.யூ) இன்ஸ்பெக்டர் நரேஷ் குமார் கூறுகையில், ஜூபேதா நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகிறார். ஆனால் அவரிடம் குடும்ப அட்டை போன்ற எந்த அடையாள அட்டைகளும் இல்லை.

"அவரது நடத்தை அடிப்படையில், கடந்த வாரம் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது". இப்போது, ஜூபேடா தனது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்து, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையை பெற தகுதியுடையவர் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்