மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவிக்கு என்ன ஆனது? பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வந்த போது நிர்மலாதேவி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லுாரி மாணவியரிடம் அலைபேசியில் தவறாக பேசியதாக கைதான, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, காமராஜ் பல்கலை பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீதான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர்.

அப்போது விசாரணை தொடங்கும் நேரத்தில் திடீரென நிர்மலா தேவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்தும் , பெண் காவலர்கள் அவரது கைகளைத் தேய்த்து விட்டும் அவரை ஆசுவாசப்படுத்தினர்கள்.

பின்னர் 3 பேரும் வரும் 23 ஆம் திகதி விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நிர்மலா தேவி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers