இந்தியாவில் ஏழு தலையுடன் பாம்பு இருப்பதாக கூறி, அதன் தோல் ஏழு தலையுடன் இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பெங்களூருவிலிருந்து சுமார் 60 கி.மீற்றர் தொலைவில் இருக்கும் கிராமம் ஒன்றில், பாம்பு ஒன்று ஏழு தலையுடன் இருப்பதாகவும், அதன் தோல் தான் இது என்று கூறி, அதன் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
அதுமட்டுமின்றி இந்த தோல் இருக்கும் இடம் சக்தி வாய்ந்த இடம் என்று அங்கிருக்கும் கிராம மக்கள் அதை தெய்வீகமாக பார்த்து வருகின்றனர்.
Multi-headed snake’s skin draws crowds in Kanakapura #Karnataka pic.twitter.com/suXh4eGHhl
— TOI Bengaluru (@TOIBengaluru) October 10, 2019
ஆனால் ஒரு சிலர் இந்த தோல் 6 மாதங்களுக்கு முன்பு குறித்த பகுதியில் இருக்கும் கோவிலுக்கு அருகில் பார்த்தது என்று கூறி வருகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் அப்படி இருக்க சாத்தியமே இல்லை எனவும், இரண்டு தலை கொண்ட பாம்பு மட்டுமே இருப்பதற்கு சாத்தியம், என்று கூறியுள்ளனர்.
இருப்பினும் அந்த வீடியோ ஏழு தலை கொண்ட பாம்பின் தோல் என்று இணையவாசிகள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.