முத்தம் கொடுக்க வந்த மனைவியின் நாக்கை அறுத்தெடுத்த கணவன்!

Report Print Vijay Amburore in இந்தியா
337Shares

அகமதாபாத்தில் முத்தம் கொடுப்பதை போல மனைவியின் நாக்கை கடித்து கத்தியால், கணவன் அறுத்து வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த தஸ்லீமா என்கிற பெண், தன்னுடைய கணவர் நாக்கை அறுத்துவிட்டதாக கடந்த வியாழக்கிழமையன்று பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வாயில் ரத்தம் வழிந்தோடியபடியே இருந்த தஸ்லீமா வேகமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் நாக்கு இணைக்கப்பட்டது.

தஸ்லீமா கொடுத்த அந்த புகாரில், மார்ச் 24, 2018 அன்று அன்சாரி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

சில நாட்கள் கழித்து அன்சாரிக்கு வேறு ஒரு மனைவி இருப்பது, தஸ்லீமாவிற்கு தெரியவந்துள்ளது. எந்த வேலைக்கும் செல்லாமல் பெரும்பாலான நேரங்களில் அன்சாரி தன்னுடைய இரண்டாவது மனைவியின் வீட்டிலே தங்கி வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த தஸ்லீமா, கணவரிடம் இதுகுறித்து கேட்கும் போது, கடும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறார். இந்த நிலையில் வியாழக்கிழமையன்று அன்சாரி முத்தம் கொடுக்குமாறு மனைவியிடம் கேட்டுள்ளார்.

உடனே தஸ்லீமாவும் முத்தம்கொடுக்க முற்படும் போது, அவருடைய நாக்கை கடித்து பின்னர் கத்தியால் அதனை வெட்டி எடுத்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்