உடல் முழுவதும் எறும்புகள் ஊர்ந்த படி இறந்து கிடந்த நோயாளி: மருத்துவர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Basu in இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உடல் முழுவதும் எறும்புகள் ஊர்ந்த படி இறந்த கிடந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

காசநோயால் பாதிக்கப்பட்ட பால்சந்திர லோதி (50) செவ்வாய்க்கிழமை காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐந்து மணி நேரம் கழித்து, அவர் இறந்தார், அதே வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் அதைப் பற்றி மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

காலை 8.30 மணியளவில் தகவல்களைப் பெற்ற போதிலும், மருத்துவமனை ஊழியர்கள் அதைப் புறக்கணித்தனர். கடமையில் இருந்த மருத்துவரும் காலை 10 மணியளவில் வார்டுக்கு சென்றுள்ளார், ஆனால் அவரும் லோதியை கண்டுக்கொள்ளவில்லையாம்.

பின்னர், இறந்தவரின் மனைவி ராம்ஸ்ரீ லோதி மருத்துவமனை படுக்கையில் இறந்து கிடந்த தனது கணவரின் உடல் மீது இருந்த எறும்புகளை அகற்றியுள்ளார்.

இந்நிலையில், சிவ்புரி மாவட்ட மருத்துவமனையின் கவனக்குறைவு தொடர்பான வழக்கு விசாரணைக்கு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் புதன்கிழமை உத்தரவிட்டார், அதில் இறந்த நோயாளியின் உடம்பில் எறும்புகள் ஊர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிவ்புரியில் உள்ள ஒரு மாவட்ட மருத்துவமனையில் இறந்த நோயாளி மீது எறும்புகள் ஊர்ந்து செல்வது மிகவும் உணர்ச்சியற்றது. இதுபோன்ற சம்பவங்கள் மனிதகுலத்திற்கு அவமானம், சகித்துக்கொள்ள முடியாது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன், குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்