சிவப்பாக இல்லை என புதுமனைவியை திட்டிய கணவன்... வேதனையில் எடுத்து விபரீத முடிவு

Report Print Vijay Amburore in இந்தியா

கருப்பாக இருக்கிறாய் என கணவன் திட்டிக்கொண்டே இருந்ததால், மனவேதனையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான மங்கி பாய் என்கிற இளம்பெண் கடந்த 6 மாதத்திற்கும் முன்பு, தினேஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

அப்போதிலிருந்தே மங்கி பாயின் நிறம் கருப்பாக இருக்கிறது என தினேஷ் குறைகூறி தாக்குதல் நடத்தி வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மங்கி பாய் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை சமாதானப்படுத்தி தந்தை தேவ்லால் கணவருடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால் கருப்பாக இருக்கும் மனைவி எனக்கு வேண்டாம் என தினேஷ் அவமானப்படுத்தியுள்ளார். இதனால் பெரும் மனவேதனையடைந்த மங்கி பாய் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், தினேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்