பொறாமை காரணமாக நடந்த கொலையா? துப்புதுலங்கிய பகீர் சம்பவம்!

Report Print Abisha in இந்தியா

உத்தரபிரதேச மாநிலத்தில் பொறாமை காரணமாக கொலை நடந்துள்ளதாக விசாரிக்கப்பட்ட நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள கிரிதர் காலனி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் 29வயதான பங்கஜ் சிங். நான்காம் ஆண்டு சட்டம் படித்துவரும் அவர், இணைய மையம் ஒன்றை நடத்தி கணிசமாக பணம் சம்பாதித்து வந்தார்.

இதனால், அவர் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. எனவே அவர், அந்த பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் குடிபுகுந்துள்ளார். இந்நிலையில், பஞ்கஜ் சிங் மாயமாகினார் இதனால், வீட்டின் உரிமையாளர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் துப்பு எதுவும் துலங்கவில்லை.

விசாரணைக்குபின் வீட்டின் உரிமையாளர் முன்னா தப்பி ஓடியுள்ளார். அதன்பின் 15ஆம் திகதி முன்னாவின் வீட்டில் பொலிசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர் வீட்டின் பின்னால் குழி ஒன்று தோண்டப்பட்டிருந்தது. அதில் பங்கஜின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து பங்கஜ் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றினர். தொடர்ந்து முன்னாவின் குடும்பம் மொத்தமாக இரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், முன்னாவிற்கு நான்கு பிள்ளைகள். அவர்கள் நான்கு பேருக்கும் பங்கஜ் டியூஷன் எடுத்து வந்துள்ளார். அப்போது முன்னாவின் மூத்த மகள் அங்கிதாவிற்கும் பங்கஜ்க்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி தனியே சந்தித்துள்ளனர். அப்போது அங்கிதாவை தன்னுடன் இருக்கும் படியும் தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படியும் பங்கஜ் வற்புறுத்தி வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் இது முன்னாவிற்கு தெரியவர, குடும்பத்தினர் ஒன்றிணைந்து பங்கஜ்-யை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து அங்கிதா பங்கஜை அலைப்பேசியில் வீட்டுக்கு அழைத்து அங்கு வைத்து கொலை செய்து வீட்டுக்கு பின்னால் புதைத்துள்ளனர்.

அதன்பின் அனைவரும் சாதாரணமாக இருந்துவந்துள்ளனர். பங்கஜ் காணாமல்போன வழக்கு விசாரணை துவங்கிய பின் அனைவரும் தப்பி செல்ல முற்பட்டு பிடிபட்டு அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இணைய மையத்தால் தான் கொலை நடந்தது என்று நினைத்த நிலையில், முன்னா குடும்பத்தின் வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்