நாங்கள் அப்பா - மகள் என அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்த 50 வயது ஆண் மற்றும் 20 வயது பெண்.. வெளியான உண்மை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இளம் வயது பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நபர் அவராலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டிக்கு (50) திருமணமாகி இரண்டு மனைவிகள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் மீது ஏராளமான கார் கொள்ளை வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் 3-வதாக இவர் கார் திருடுவதற்கு துப்புக் கொடுக்கும் பெண்ணான சித்ரா (20) என்பவருடன் தூத்துக்குடியில் ரகசியமாக குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

சித்ரா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினரிடம், நாங்கள் இருவரும் அப்பா, மகள், என் மகளுக்கு தாய் இல்லை எனச் சொல்லி இருவரும் அவர்களை நம்பவைத்துள்ளனர்.

இந்நிலையில் கார் வாங்குவது தொடர்பாக அடிக்கடி வீட்டுக்கு வந்த ராமர் (22) என்பவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இவர்களது விவகாரத்தைத் தெரிந்துகொண்ட ராஜபாண்டி, சித்ராவைக் குடிபோதையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதையடுத்து ராமரிடம், ராஜபாண்டி உயிரோடு இருக்கும் வரை நாம் ஒன்றாக முடியாது என்று கூறி சித்ரா கண்ணீர் விட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் ராமர், சித்ரா மற்றும் அவர் நண்பர் சக்திவேல் ஆகிய மூவரும் ராஜபாண்டியை அரிவாளை கொண்டு தலையை துண்டாக அறுத்தனர்.

தலையை புதியம்புத்தூரில் உள்ள கிணற்றிலும், உடலை கீழத்தட்டப்பாறை பகுதியிலுள்ள கல்குவாரியிலும் வீசியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையில் பொலிசார் சித்ரா மற்றும் ராமரை கைது செய்துள்ளனர். தலைமறைவான சக்திவேலை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்