இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் பிஞ்சு குழந்தையை சுவற்றில் வீசி கொடூரமாக கொலை செய்த நபர் மனைவியையும் கொல்ல முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியில் குடியிருக்கும் குமல்லா என்பவர் கடப்பா பகுதியை சேர்ந்த ரமாதேவி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
குமல்லா தமது மனைவியை எப்போதும் சந்தேகத்துடனே கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குமல்லா பிறந்து 8 மாதமேயான சொந்த பிள்ளையை சுவற்றில் வீசியுள்ளார். இதில் சம்பவயிடத்திலேயே அந்த குழந்தை மரணமடைந்துள்ளது.
பின்னர் மனைவி ரமாதேவியை அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்களால் குமல்லா அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதனையடுத்து பொதுமக்கள் ரமாதேவியை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மனைவி லட்சுமியை இதே காரணங்களால் கொலை செய்த வழக்கில் குமல்லா சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
தற்போது பிஞ்சு குழந்தையை கொன்றுவிட்டு இரண்டாவது மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவான குமல்லாவை பொலிசார் தேடி வருகின்றனர்.