ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை! இந்தியாவில் அபாயகட்டத்தில் குழந்தைகள்?

Report Print Abisha in இந்தியா

இந்தியாவில், குழந்தைகள் அபாயகட்டத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

வன்கொடுமைக்கு எதிராக தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் உரிமை அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்தியாவில் சாராசரி நாள் ஒன்றிற்கு 96குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர்.

மேலும், காப்பகத்தில் இருக்கு சுமார் 4லட்சம் குழந்தைகள் அபாயகரமான சூழலில் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

அதிலும் குறிப்பாக மத்தியபிரதேசம் மாநிலத்தில் தான் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை அதிகம் நிகழ்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவணகாப்பகத்தின் புள்ளி விவரத்தின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டு 4,857 குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாகவும், 30,123 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில், மத்தியபிரதேச மாநிலத்தில் மட்டும் 1638 வழக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்