பிரியங்காவை சீரழித்து கொன்ற கொடூரர்களை உடனடியாக கொல்ல வேண்டும்! வலுக்கும் எதிர்ப்பு.. குவிந்த மக்கள்

Report Print Raju Raju in இந்தியா

பிரியங்கா ரெட்டியை கொலை செய்தவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை அளிக்க வேண்டும் என காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தின் ஷத்நகரை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக முகமது பாஷா, நவீன், ஷிவா, கேஷவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு பேர் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரும் ஷித்நகர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த காவல் நிலையத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டவர்களும் அடக்கம்.

அதில் ஒரு சாரார் கூறுகையில், குற்றவாளிகளிடம் விசாரணை எல்லாம் நடத்தி காலம் தாழ்த்த கூடாது. உடனடியாக அவர்களை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என கொதிப்புடன் கூறியுள்ளனர்.

மற்றொரு சாரார் கூறுகையில், இது போன்ற கொடூர குற்றவாளிகளுக்கு சமுதாயத்தில் இடமில்லை, அவர்களை என்கவுண்டரில் சுட்டு கொல்ல வேண்டும் என கூறினர்.

இதனிடையில் நான்கு குற்றவாளிகளையும் இன்று பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

அதனால் எந்தவிதமான அதம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்