தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி! சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு தெரிந்த அதிர்ச்சி உண்மை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் திடீரென கடந்த வாரம் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து உடனடியாக அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் மாணவிக்கு சிகிச்சையளித்த போது அவர் 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இந்த தகவலை மருத்துவர்கள் மாணவியின் பெற்றோரிடம் கூறியபோது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் மாணவியின் உயிரை காப்பாற்ற வேண்டுமானால் வயிற்றில் உள்ள சிசுவை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு மாணவியின் பெற்றோர் ஒப்புக்கொள்ள அறுவை சிகிச்சை செய்து 6 மாத சிசு அகற்றப்பட்டது. இருப்பினும் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

இது குறித்து திருச்சி பொலிசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார் எனவும், தற்கொலை தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்