கர்ப்பிணி மகளின் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்த தந்தை

Report Print Vijay Amburore in இந்தியா

காதலனின் துணையோடு கர்ப்பிணி மகளின் முகத்தை சிதைத்து கொலை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 18ம் திகதியன்று அடையாளம் காணமுடியாத அளவிற்கு முகம் சிதைக்கப்பட்ட, இளம்பெண் ஒருவரின் சடலம் கிணற்றில் மிதந்துள்ளது.

அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் அவர் கர்ப்பிணியாக இருந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார், கொலை செய்யப்பட்ட இளம்பெண் 18 வயதான நேகா என்பதை அடையாளம் கண்டு அவருடைய வீட்டிற்கு தகவல் கொடுப்பதற்காக சென்றுள்ளனர்.

ஆனால் வீட்டிலிருந்த நேகாவின் தந்தை ராஜாராம் யாதவ், சில நாட்களாக மாயமாகியிருந்ததால் அவர் மீது சந்தேகம் திரும்பியது.

இந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட அவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

Jagran

நேகாவும் ராகேஷ் சோங்கர் என்கிற இளைஞரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதில் நேகா கர்பமடைந்ததை அடுத்து, 17ம் திகதியன்று இரவு ராகேஷ் சோங்கர் உடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம், மகளை கொண்டுவந்து ஒப்படைக்கவில்லை என்றால் பொலிஸில் புகார் கொடுத்துவிடுவேன் என ராகேஷ் சோங்கரை மிரட்டியுள்ளார்.

இதற்கு பயந்துகொண்டு ராகேஷ் சோங்கர் நேகாவை அழைத்து வந்ததும், கொலை செய்ய உதவவில்லை என்றால் பொலிஸாரிடம் புகார் கொடுத்துவிடுவேன் என மீண்டும் மிரட்டியுள்ளார்.

அதற்கு ராகேஷ் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, நேகாவை கழுத்தை நெரித்துக்கொலை செய்துவிட்டு முகத்தை கல்லால் அடித்து ராஜாராம் சிதைத்துள்ளார்.

பின்னர் அந்த உடலை ஆள்நடமாட்டம் இல்லாத கிணற்று பகுதியில் ராகேஷ் வீசி எறிந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இருவரையும் கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...